இத்தாலி ஜெனோவா மாநகரில் நடைபெற்ற தமிழர் விழா 2026

பொங்கல் சங்கத்தமிழனின் தேசிய விழா.விதைத்த விதையின் வேரில் முளைத்த வியர்வைத் துளிகளின் அறுவடைத் தனிப்பெரும் விழா தமிழர் விழா.தமிழர்கள் தங்களுக்கு உதவிய அனைத்துக்கும் நன்றி கூறி தை மகளை வரவேற்று(18/01/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 12:00 மணிக்கு தமிழர் இல்லத்தில் புதிய பொங்கல் பானையில் பால் பொங்கி வர கதிரவனை வரவேற்று பொங்கல் பொங்கி அனைவரும் மகிழ்ந்திருந்த வண்ணமே மதிய நேர விருந்தோம்பலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நடனம், வில்லிசை,கவிதை, பேச்சு மேலும் பல்கலை நிகழ்வுகளுடன் முதல் முறையாக ஜெனோவா மாநகரில் காத்தவராயன் கூத்து அரங்கேற்றப்பட்டது. இல்லம் நிறைந்த ஜெனோவா வாழ் ஈழத்தமிழர்களுடன் விழா நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு