பழந்தமிழர் பண்பாடுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் நன்றி கூறுதல் எனும் மரபிற்கேற்ப கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பொங்கல் திருநாளான தமிழர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையும், பியமொந்தே தமிழ்ச் சங்கமும் இணைந்து நடாத்திய தமிழர் விழா கொண்டாட்டமானது 18/01/2026 அன்று திரிவேறோ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

பியல்லா வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த இந்நிகழ்வில் 10.30 மணியளவில் பொங்கல் வைப்பதுடன் ஆரம்பமாகி கதிரவனுக்குப் படையலிட்ட பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், அகவணக்கம் மற்றும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றல் என்பவற்றைத் தொடர்ந்து பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை பழைய மாணவிகளின்பெற்றோர் மங்கல விளக்கேற்றப்பட்டு. வரவேற்புரை நடைபெற்றதைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமானது. கவிதை, பேச்சு, தாயகப்பாடலுக்கான நடனம், கிராமியப் பாடலுக்கான நடனம், தாயகப் பாடல், மற்றும் கருத்துள்ள பாடல்கள், நாடகம் என நிகழ்வுகள் சிறப்புடன் நிகழ்ந்தேறியது.

தொடர்ந்து இத்தாலி தமிழ்க்கல்விச்சேவை நடத்திய தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் அதிதிறன் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. அத்துடன் ஆண்டு 12 வரை கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் மதிப்பளித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியை திருமதி விஸ்வரூபி ரவிசங்கர் அவர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி மதிப்பளிப்புசெய்யப்பட்டது.அடுத்து நன்றியுரையினைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேற்றலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு