இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச் சோலையில் இடம்பெற்ற தமிழர் விழா 2026
ஒரு இனத்தின் ‘பண்பாட்டு விழுமியம்’ என்பது அந்த இனம் மற்ற உயிர்களை எவ்வாறு மதித்து வாழ்ந்தது என்பதில் தான் இருக்கிறது. நம் இனம் வந்தோரை வரவேற்று விருந்தோம்பி கொண்டாடித் தீர்த்து இவ்விதம் தான் மதித்திருக்கிறது. விருந்தோம்பிக் கொண்டாட துணைநின்ற கதிரவனுக்கும் உழவனுடன் துணைநின்ற மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கிப் படையலிட்டு போலோனியா திலீபன் தமிழ்ச் சோலையில் 18.01.2026 அன்று நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து தமிழர் விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர்.
































































