இத்தாலி பியல்லாவில் நடைபெற்ற ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், ஒளி விழாவும்.

தென்கிழக்கு ஆசியாவையே பேரவலத்துக்குள்ளாகிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான 21ம் ஆண்டு வணக்க நிகழ்வு 27-12-2025 சனிக்கிழமை மாலை பியல்லா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் மீள் நினைவுகள் மீட்கப்பட்டு சிற்றுரை நிகழ்த்தப்பட்டது .தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இயேசு பாலன் பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும் ஒளிவிழாவும் நடைபெற்றது. இவ் விழாவின் முதன்மையாக இளையோர்களால் நடாத்தப்படும் வரலாற்று வகுப்பு பியல்லா மாணவர்களால் நடாத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களால் ஒளிவிழா பாடல்களும், நடனமும் இடம்பெற்று எமது நலம் விரும்பிகளால் இயேசு பாலனின் பாடல்களும் பாடப்பட்டது. இறுதியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.