இத்தாலி பலெர்மோ மாநகரில் ஆசிரியர் செயலமர்வு 2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையால் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, 14/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தமிழீழத்தின் முதல் மாவீரரான லெப். சங்கர் அவர்களுக்கான ஈகச் சுடர் இத்தாலிக் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களால் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

ஆசிரியர்களுக்கான செயலமர்வில் திலீபன் தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆண்டு 11 மற்றும் ஆண்டு 12 கற்கும் மாணவர்களும், ஆண்டு 12 வரை கற்று நிறைவு செய்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இச்செயலமர்வினை மேற்பிராந்தியத்திலிருந்து வருகை தந்த திருமதி. நளாயினி ரவிகுமார் மற்றும் திருமதி. சர்மினி கவிதாசன் ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

செயலமர்வில் தாய்மொழிக் கல்வியில் மாணவர் நிலை சார்ந்த கற்பித்தல், கற்பித்தலைத் திட்டமிடல், கற்பித்தல் அணுகுமுறைகளும் உத்திகளும், விளையாட்டு முறைக் கற்பித்தல், சிறப்புக் கற்றல் தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் போன்ற பல விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டன. இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வானது ஆசிரியர்கள் மற்றும் முதன்மை மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

உங்கள் கவனத்திற்கு