தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 ஜெனோவா இத்தாலி


மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,சாதாரண மரண நிகழ்வு அல்ல,எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களின் மரணம் திகழ்கின்றது என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளைத் தொட்டுக் கொண்டு ,
ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள் நவம்பர் 27 இந்நாள் ஜெனோவா மாநகரில் (27/11/2025) வியாழக்கிழமை Salita Terrapieni 3r 16137 Genova என்னும் இடத்தில் உள்ள மண்டபத்தில் 13:00 மணிக்கு ஆரம்பமாகி 13:35 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசியக் கொடியேற்றி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டு முதன்மை சுடரேற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து. மலர் வணக்கம், சுடர் வணக்கம் இடம்பெற்றது.நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றல் செய்யப்பட்டு ,”நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன் 2025 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் நிறைந்த மண்டபத்தில் நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு