அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 26/10/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழியில் அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட அறிவாடல் இறுதிப் போட்டியில் இத்தாலியில் இருந்து 20 மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.

பதினொரு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலையில் இருந்து பங்கேற்ற மாணவன் செல்வன் றிஷான் றீகன்(2016) இரண்டாவது இடமும் ,ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் இருந்து பங்கேற்ற மாணவர்கள் செல்வன் காருஜன் ஈஸ்வரன் (2010) மூன்றாவது இடமும் ,மற்றும் செல்வி லதீக்கா இராஜ்குமார் (2008) மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். இப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய எங்களது மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.எமது மாணவர்களின் பங்களிப்பிற்காகவும், வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய இத்தாலி அறிவாடல் குழுவிற்கும், பிரதேச அறிவாடல் குழுப் பொறுப்பாளர்களுக்கும், திலீபன் தமிழ்ச்சோலையின் நிர்வாகத்தினர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் கவனத்திற்கு