இத்தாலி ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது வீரவணக்க நிகழ்வும்,கேணல் சங்கர், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் 2ம் லெப் மாலதி ஆகியோர்களின் வீரவணக்க நிகழ்வும்.

சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க வேண்டும் என. தமிழினத்திற்கு ஒளி கொடுத்து தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாகப் பயணமானது இன்று 38 ஆண்டுகளை கடந்து நிற்கிறது.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 38வது ஆண்டு நினைவு நாளையும்,
தமிழீழ வான்படை சிறப்பு தளபதி கேணல் சங்கர், மூத்த போராளிகளான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன், மற்றும் அவர்களுடன் களப்பலியான மாவீரர்களையும்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற்களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி அவர்களையும்
நினைவு கூர்ந்த வணக்க நிகழ்வுகள் நேற்று 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிக்கு ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல், அகவனக்கத்துடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், நினைவுப் பகிர்வுகள் என்பனவும் இடம்பெற்று
இறுதியில் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒளிபரப்புப்பட்டதைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரக மந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு