ஆடிப்பெருவிழா 2025
ஆடிப்பெருவிழா 2025
ஆடிப்பிறப்பு என்பது தமிழர் தம் வாழ்க்கையில் இன்றியமையாத விழாவாகும். இந்நாளினை வரவேற்று (20/07/2025) ஞாயிற்றுக்கிழமை ஜெனோவா CAMPI DELLO ZERBINO எனும் விளையாட்டுத்திடலில் அக வணக்கத்துடன் மங்கல விளக்கேற்றப்பட்டு ஆடிப்பெருவிழா பாடல் இசையுடன் மைதான விளையாட்டுகள் ஆரம்பமானது. சிறுவர் முதல் பெற்றோர்கள் வரையிலான அனைத்து விளையாட்டுகளும் விறு விறுப்பாகவும் ஒருவருக்கு ஒருவர் தளராத வேகத்துடன் இரண்டு இல்லங்களும் விளையாடி மகிழ்ந்தனர்.
சங்கிலியன் சிவப்பு இல்லமாகவும் எல்லாளன் மஞ்சள் இல்லமாகவும் உளநெகிழ்ந்து விளையாடி சிவப்பு இல்லம் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இல்லங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அவற்றின் பதிவுகள்…..


























































































