இத்தாலி மேற்பிராந்தியத்தில்தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் 2025 .

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 29-06-2025 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள், மற்றும் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகள் சிறப்பாக ரெச்சியோ எமிலியா மாநகரில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலி, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டது. விளையாட்டுத் துறையின் கொடி ஏற்றலை தொடர்ந்து கழகங்கள் தமது கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து ஈகைச்சுடர் அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமானது. இச் சுற்றுப் போட்டியில்
போலோனியா, ரெச்சியோ எமிலியா, மாந்தோவா, பியல்லா,ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மெய்வல்லுனர் போட்டிகளில்
பங்கேற்று சிறப்பித்ததோடு உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்வே விளையாட்டுக் கழகம்,ஸ்ரார் போய்ஸ் விளையாட்டுக் கழகம், அக்கினி விளையாட்டுக் கழகம், இராவணன் விளையாட்டுக் கழகம், நட்பே துனை விளையாட்டுக் கழகம், ரெச்சியோ ஸ்ரார் விளையாட்டுக் கழகம், கப்டன் மில்லர் விளையாட்டுக் கழகம், தாய்மண் விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. போட்டிகள் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து உதைபந்தாட்டம் கீழ்ப் பிரிவில் தாய் மண் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தையும், கப்டன் மில்லர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தையும் தமதாக்கிக் கொண்டது. மத்திய பிரிவில் கப்டன் மில்லர் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தையும், தாய் மண் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

மேற்பிரிவு உதைபந்தாட்ட அணிகள் கடும் போட்டிகளுக்கு மத்தியில் முதலாம் இடத்தை ஒன்வே விளையாட்டுக் கழகம் தமதாக்கிக் கொண்டது. இரண்டாம் இடத்தை ஸ்டார் போயிஸ் விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தை அக்கினி விளையாட்டுக் கழகம் தமதாக்கிக் கொண்டன. அதேபோல் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாம்
இடத்தை ரெச்சியோ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தை அக்கினி(அ) விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை அக்கினி (ஆ) விளையாட்டுக் கழகமும் தமதாக்கிக் கொண்டது. சிறப்பு விளையாட்டாக வினோதஉடைப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்படி போட்டியில் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் பங்கு பற்றி நிகழ்வு சிறப்புற உறுதுணையாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தல் செய்யப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க விடப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு