தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222153_Microsoft-365-Office-719x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222153_Microsoft-365-Office-719x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222214_Microsoft-365-Office-699x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222214_Microsoft-365-Office-699x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222234_Microsoft-365-Office-708x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222234_Microsoft-365-Office-708x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222254_Microsoft-365-Office-690x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222254_Microsoft-365-Office-690x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222508_Microsoft-365-Office-713x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2024/11/Screenshot_20241127-222508_Microsoft-365-Office-713x1024.jpg)
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2024
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழஅரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்தமாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள்கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமெனஉறுதிகொள்ளும் புரட்சிகரநாள்.
தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில்விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம்என்ற உயிர்மைக் கருத்தியலினை எமது வாழ்வியல்நெறியாகவும் அரசியல் வழியாகவும் கொண்டு, தமிழீழத்தனியரசமைக்கும் விடுதலைப்பயணத்தில், உறுதியுடன்போராடுவோம் என எழுச்சிகொள்ளும் தமிழீழத் தேசியநாள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குஎடுத்துச்சென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும்அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள். தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தால்ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு, இறந்தவர்களைநினைவுகூருதல் தொடர்பான அனைத்துலகச்சட்டங்களைப் புறந்தள்ளி, சுதந்திரமாகத் தமிழ்மக்கள்தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாத அளவிற்குத்தடைகள் உள்ளபோதிலும் ஆண்டுதோறும் இம்மாவீரச்செல்வங்களுக்குச் சுடரேற்றி நினைவேந்தி வருகின்றார்கள்.
எமது தாய் மண்ணில் நாம் தன்னாட்சி உரிமையுடன்அரசாட்சி செய்த சூழமைவில் அன்னிய ஆக்கிரமிப்புக்களின்தொடர்ச்சியாக, பிரித்தானியர் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர்;, தமிழர் தேசமும் சிங்கள தேசமும் இணைக்கப்பட்டு, 1948 இல் சிங்களவர்களுக்குச் சுதந்திரம் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள், அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் உயிர்அச்சுறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்ட சூழமைவில், தமிழினம் தம் உரிமைகளுக்காகப் போராடநிர்ப்பந்திக்கப்பட்டது.
சிங்கள அரசுகளால் திட்டமிட்டசிங்களக்குடியேற்றங்களுக்கூடாக எமது தாயகநிலப்பகுதிகளைப் படிப்படியாகப் பறித்தெடுத்து, முழுஇலங்கைத்தீவினையும் பௌத்த சிங்கள நாடாக்கும் தமதுஇனவெறிக்கோட்பாட்டின் உச்சமாக, அடிப்படைஉரிமைகள் மறுதலிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னாட்சிஅரசியல் உரிமை கோரி தமிழ் மக்கள் நடாத்தியஅறவழிப்போராட்டங்களை, சிங்கள இனவாத அரசுகள்ஆயுத வன்முறையூடாகக் கொடூரமாக அடக்கியொடுக்கியது. முப்பதாண்டுகால அரசியல்ரீதியான அறவழிப்போராட்டங்கள்அனைத்தும், சிங்கள இராணுவப் பலத்தால் நசுக்கப்பட்டநிலையில் பறிக்கப்பட்ட எமது அரசியல் உரிமைகளைநிலைநாட்டி, எமது தாய்மண்ணைப் பாதுகாத்து, தமிழினஅழிப்பினைத் தடுத்துநிறுத்தி, எமது மக்களைப்பாதுகாக்கவே ஆயுதமேந்திப் போராடும் நிலமைக்கு நாம்நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
தமிழீழத்தினை வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தினைஆரம்பித்த எமது இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ்மக்களது அரசியலைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக, தமிழீழமக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு பெரும்தேசியவிடுதலை அரசியற்போராட்ட இயக்கமாகப்பரிணமித்தது. போர்க்களங்களில் எமது இயக்கம்வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, உலகின் தலைசிறந்தஓர் விடுதலை இராணுவக்கட்டமைப்பு என்ற சர்வதேசத்தின்கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேவேளை, காலத்திற்குக்காலம் வாய்ப்புகள் ஏற்பட்ட போதெல்லாம்அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது தேசியஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாம்பின்நின்றதில்லை. திம்புவில் தொடங்கி நோர்வேவரையிலுமான அனைத்துச் சமாதான முயற்சிகளிலும் நாம்பங்குகொண்டு, நிரந்தரமான ஓர் அரசியற் தீர்வைக்காண்பதற்கு நேர்மையாக முயன்றோம் என்பதனைச்சர்வதேசச் சமூகம் நன்கறியும்.
பேச்சுவார்த்தைகள், பலசுற்றுக்களாக நடைபெற்ற போதும்சிறிலங்கா அரசானது எமது இனப்பிரச்சினைக்குத்தீர்வைத்தர முன்வராது இழுத்தடிப்புச் செய்து இனவழிப்புப்போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தியது. இதன் விளைவாகப்போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, தமிழர் தாயகத்தைஆக்கிரமிக்கப் பெரும்போரை மேற்கொண்டுஇந்நூற்றாண்டின் பேரவலமான ஓர் இன அழிப்பு நடைபெறவித்திட்டது.
போர் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமதுஇயக்கம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதும்உலகநாடுகள் பாராமுகமாக இருந்தன. தமிழினத்துக்குஎதிரான வன்முறையில் தீவிரம்காட்டி, தமிழ்மக்களைக்கொன்றொழித்த போரை நிறுத்துமாறு, தமிழ்மக்கள் தமதுசக்திக்குட்பட்டு உலகநாடுகளெங்கும் போராடியபோதும்இந்த உலகம், எமது மக்களைப் பேரழிவிலிருந்துகாப்பாற்றத்தவறிவிட்டது. இந்நிலையில், நாளாந்தம்ஆயிரக்கணக்காகக் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருந்தஎமது மக்களையும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவவசதியின்றி ஒவ்வொரு நொடியும் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்பதற்காகவேஎமது ஆயுதங்களை மௌனித்தோம்.
அதன் பின்னரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்டஇன அழிப்பு இன்றுவரை தொடர்கின்றது. தமிழீழத்தில், சிங்கள இராணுவத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டதமிழரின் பூர்வீக நிலப்பரப்பு, இன்னும் உரியவர்களிடம்கையளிக்கப்படாதுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரியநிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துமகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில்சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தித்தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திவருகின்றது.
சிங்கள அரசானது தமிழ் மக்களின் பொருளாதாரவளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும்சுரண்டிவருவதுடன், தொடர்ந்தும் எம்மக்களைச் சிங்களப்பேரினவாதத்திடம் கையேந்தும் நிலையிலேயேவைத்துள்ளது. இதனால், தமிழ்மக்கள் அகதிகளாகஅடிப்படை வசதிகளற்றநிலையில் வறுமையில்வாழ்ந்துவருகின்றனர். தமிழீழ மக்களின் ஒற்றுமையைச்சீர்குலைக்கச் சாதி, மதம் மற்றும் பிரதேசவாத முரண்பாட்டுக்கருத்துக்களை உருவாக்கிவருவதோடு, எமது இளையதலைமுறையினரைச் சிதைக்கும் நோக்குடன்போதைப்பொருள் பாவனை, கலாச்சாரச் சீரழிவு மற்றும்வன்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எமதுஇளையதலைமுறையினரின் கல்விவளர்ச்சியினைத் தடுக்கும்மூலோபாயத்தினைச் சிறிலங்கா அரச கட்டமைப்புகள்முன்னகர்த்திவருகின்றன.
சிறிலங்காப் பேரினவாத அரசால் திட்டமிட்டுமேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையுடன் தொடர்புபட்டபடையினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாத்துவருவதுடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையகத்தின்தீர்மானங்களையும் இப்புதிய அரசும் நிராகரித்துவருகின்றது. இதேவேளை, பல ஆண்டுகளாக அரசியற்கைதிகளாகவுள்ளஎம்மவர்களை விடுதலைசெய்யாது, தொடர்ந்தும் பலர்சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்படுகின்றார்கள். இதற்கு நீதிகேட்டு, எமது மக்கள்சர்வதேசச் சமூகத்திடம் குரல்கொடுத்து வருகின்றார்கள். காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், அரசியற்கைதிகள்விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பிலான போராட்டங்களெனப் பல வழிகளிலும்உலகத்திடம் நீதிவேண்டிப் போராடிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில்முடிவுகள் ஏதுமின்றி, அவர்களது உறவுகளும் சாவடையும்அவலநிலை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள்போராளிகளின் நிலைமைகளும் துன்பத்திற்கிடமாகவே உள்ளதோடு, சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டபலர் சந்தேகத்திற்கிடமான முறையிலும் சாவடைந்துவருகின்றனர். இதேவேளை, பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் பலரும் பாதுகாப்பின்றிச் சொல்லொணாத்துன்பங்களோடு வாழ்ந்து வருகின்றார்கள்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
சிங்கள மக்களின் மகாவம்ச மனநிலையில், அவர்களதுஅரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமெனநாம் எதிர்பார்க்கமுடியாது. மாறாக, அது புதிய, புதியவடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.
தென்னிலங்கை அரசியற்களத்தில், அதன் ஆதிக்கம்மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின்தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்துஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளைநாமாகவே போராடி வென்றெடுக்கவேண்டுமே தவிர, சிங்களஅரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம்என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும்இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் தெளிவானநிலைப்பாடாக இருந்து வருகிறது.
ஈழத்தமிழர்களைப் போராட நிர்ப்பந்தித்த அடிப்படைக்காரணங்களில் சாதகமான மாற்றம் நிகழாத ஒருசூழலிலேயே, பௌத்த சிங்களப் பேரினவாதக்கட்சியொன்று பெரும்பாண்மை வாக்குகளோடும் இன்றுஆட்சிப்பீடமேறியுள்ளது. தோல்வி மனப்பான்மையும்பொருளாதார சுமைகளும் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினரை மாயவலைக்குள் வீழ்த்தியுள்ளது. விடுதலையைநேசிக்கும் எமது மக்கள், சதிவலைகளிலிருந்துமீண்டெழுந்து சுதந்திர தேசத்திற்கான வடம் பிடித்து இனவிடுதலைக்கு வலுச்சேர்ப்பார்கள் என்று உறுதியாகநம்புகிறோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுசொல்லும் பாடமும் இதுவே.
இனவாதச்சிங்களத் தலைமைகளினால் 75 ஆண்டுகளுக்குமேலாக இன அழிப்பைச் சந்தித்துவரும் தமிழீழ மக்கள், பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியலையும் அதன்வரலாற்றுச் சமூகப் பரிமாணங்களையும் வாழ்வியல்அனுபவங்களோடு கண்டறிந்தவர்கள். தற்போது பௌத்தசிங்களப் பேரினவாதக் கட்சியொன்று தேர்தலில்பெரும்பான்மையாக வெற்றி பெற்று அனுரகுமாரதிசாநாயக்க தலைமையில், ஒரு புதிய அரசாங்கம்ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளது. இது சிங்கள மக்கள்விரும்பிய அரசியல் மாற்றம் ஒன்றின் வெளிப்பாடாகும். தமிழ்மக்களைப் பொறுத்தவரை தமிழர் இனப்பிரச்சினை சார்ந்து, அடுத்து என்ன மாற்றம் நிகழுமென நாம் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும். ஆனால், புதிய அரசை அமைத்திருக்கும் கட்சிகளின் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணிபிரதான கட்சியாகும். இக் கட்சியின் கடந்த கால அரசியற்பயணமானது தமிழின அழிப்பை முதன்மைப்படுத்தியதாகவேஅமைந்திருந்தது. தற்போதும் இலங்கையர் என்றஒற்றைச்சொல்லில் தமிழர் அடையாளத்தைக் கரைத்திடும்கருத்தியலே முன்னகர்த்தப்பட்டு வருகிறது. இந்தவேளையில், 1983 இன் யூலைப் படுகொலை, வடக்குக்கிழக்குப் பிரிப்பு, சுனாமி அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பின் முடக்கம், இனவழிப்புப் போருக்கானஇராணுவ ஆட்சேர்ப்புப் போன்ற கடந்தகாலத் தமிழினவிரோதப்போக்கினையும் நாம் மறந்துவிடலாகாது.
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ்நாட்டு உறவுகளே!
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தாய்மடியாகத்தமிழ்நாட்டு மக்களாகிய நீங்களே என்றும்இருந்துவருவதுடன், ஈடிணையற்ற ஈகங்களைத் தமிழீழவிடுதலைக்காகத் தமிழினப்பற்றுடன் செய்துவருகின்றீர்கள். இவ்வையகத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்தாயகமாகத் தமிழ்நாடே இருக்கிறது. எமது மொழியையும்பண்பாட்டையும் வரலாற்றையும் தொல்லியலையும்அறிவார்ந்து வளர்த்துக்காக்கும் ஆற்றல்வளம், உங்களிடமேஒப்பீட்டளவில் கூடுதலாகவுள்ளது. கட்டமைப்புசார் தமிழினஅழிப்புக்கு எதிராக சுயாதீனச் சர்வதேச விசாரணைக்குஇந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும்வகையில், அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகவும்தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் பாதுகாப்பிற்குஇன்றியமையாத ஒரு அரணாக விளங்கக்கூடிய ஒரே நாடு தமிழீழத் தேசமாக மட்டுமே இருக்கமுடியும். தமிழீழத்தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்துகுரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு, எமதுஅன்பையும் பாராட்டுகளையும்தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அன்பிற்குரிய இளையோர்களே!
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன்அவர்களது சிந்தனைக்கமைவாக, தேச விடுதலைப்பணியினைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்வாழ் இளையவர்களின் செயற்பாடுகளை நாம் பேரன்போடுஉளமார வாழ்த்துகின்றோம். நிகழ்ந்துவரும் உலகின்புவிசார் அரசியல் மாற்றங்களை மிகத்துல்லியமாகஅவதானித்து வரும் இளையவர்களின் செயற்பாடுகள்இன்னும் விரிவு படுத்தப்படவேண்டும். நீங்கள் வாழுகின்றஒவ்வொரு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் தமிழினஅழிப்பிற்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவதற்குவிவேகத்தோடு வேகமாகச் செயற்படவேண்டும். அதேவேளைஎமது மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் போன்றதேசியப்பண்புகளைப் பேணிக்காத்து, இனஅடையாளத்தினை இழந்துவிடாமல் பாதுகாக்கும் பாரியபொறுப்பும் இளையவர்களாகிய உங்களிடமே தங்கியுள்ளது. தமிழர்களது வரலாற்று அடையாளமாகிவிட்ட எமதுதேசியத்தலைவர் அவர்களது தத்துவக்கோட்பாட்டின் வழிநின்று, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினைமுன்னகர்த்திச்செல்வீர்களென உளமார நம்புகின்றோம்.
எமது அன்பான மக்களே!
எமது மக்களின் இலட்சி உறுதியினை உடைக்க முடியாதஎதிரிகள், தம்மால் முடிந்த அனைத்து வகையானசூழ்ச்சிகளையும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழ்த்தேசியம் எனும் கோட்பாட்டினைஅழிப்பதற்காக எதிரிகள், அருவருப்பான உத்திகளைக்கையாண்டு வருகின்றார்கள். இதனூடாகத் தமிழீழ மக்களின்தேசிய ஒருமைப்பாட்டு அடையாளத்தினைச் சிதைத்து, மெதுவாகப் பௌத்த சிங்கள ஒற்றையாட்சிக்குள் எம்மைமுடக்கிவிடும் அபாயத்தினை எமது மக்கள் கண்டுணர்ந்து, எதிர் காலத்தில் மிகவும் விழிப்புணர்வோடுஇருக்கவேண்டுமென இப்புனித நாளிலே உரிமையோடுவேண்டிநிற்கின்றோம்.
உலக அரங்கில் இன்று ஏற்பட்டுவரும் சில மாற்றங்கள், எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகின்றது. பாலஸ்தீனதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் நாட்டுப்படைகளது இன அழிப்பு நடவடிக்கைகள் அனைத்துலகநீதிமன்றத்தினால் அண்மையில் விசாரிக்கப்பட்டு, இஸ்ரேல்நாட்டு அரசதலைவருக்கும் முன்னாள் பாதுகாப்புஅமைச்சருக்கும் பிடியாணை வழங்கப்பட்டிருப்பது, நீதியின்பால் உலகம் இன்னும் இயங்குவதைக்காட்டிநிற்கின்றது. இவ்வாறான முன்னுதாரணங்களோடுசர்வதேசச் சமூகம் ஈழத்தமிழ் மக்களின்இனப்பிரச்சனையையும் அணுகித் திட்டமிடப்பட்ட தமிழினஅழிப்பிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்குமுன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம். தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு எனும் மூன்று தளங்களிலும்தொடர்ச்சியாக நாம் போராட்டங்களைமுன்னெடுக்கும்பொழுது விரைவாக எமது இலட்சியத்தினைவென்றெடுக்கமுடியும்.
அன்பிற்குரிய மக்களே! தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்களே! இதுவரை காலமும் இடைவிடாதுநீங்கள் வழங்கிவந்த ஆதரவு என்றும் பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்தும் எமது மாவீரர்களின் இலட்சியக்கனவினை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கவேண்டுமென இப்புனிதநாளிலே கேட்டு நிற்கின்றோம்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின் மூலோபாயச் சிந்தனையின் அடிப்படையில், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின்ஒடுக்குமுறைகளிலிருந்து அடிமைத் தடைகளைஉடைத்தெறிந்து, தமிழீழ அரசை நிறுவும் ஆற்றலை, எமதுமாவீரர்களின் ஈகங்கள் எமக்குக் கொடுத்திருக்கின்றன. சவால்கள் மிகுந்த காலப்பகுதியில் மண்டியிடா வீரத்துடன்களமாடிய மாவீரர்களின் உளவுரணையும் அர்ப்பணிப்பையும்நெஞ்சில் நிறுத்தி, தமிழீழத் தேசத்தின் இறைமையைஎந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றவிடுதலை உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.