சனவரி 7 முதல் 15 ஆம் திகதி வரையிலான புதிய ஆணை

சனவரி 15 வரை நகர்வுகளை ஒழுங்குபடுத்தும் புதிய அரசாங்க ஆணை சனவரி 7 முதல் நடைமுறைக்கு வருகிறது. மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் மண்டல நாட்களிலும் உங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவது எப்போதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது மற்றும் வெளியிடத்திலும் மற்றும் உட்புறத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய கடமை உள்ளது. பொது இடங்களில் மற்றும் தனியார் இடங்களில் ஒன்றுகூடுதல் மற்றும் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

  • 7 மற்றும் 8 ஆம் திகதிகள்: இரண்டு மஞ்சள் மண்டல நாட்கள்

சனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் மஞ்சள் நிற மண்டலத்தில் உள்ளது. Bar மற்றும் உணவகங்கள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேசையிலிருந்து உணவு உட்கொள்ளுவது பொறுத்தவரை, அதிகபட்சம் நான்கு பேர் வரை அமரலாம். மாலை 6 மணிக்குப் பிறகு, உணவு மற்றும் பானங்களை எடுத்துச் செல்லும் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது – உணவகத்தின் அருகே அவற்றை உட்கொள்ளுவது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் வீட்டு விநியோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளும் வணிக மையங்களும் திறந்திருக்கும். சிகையலங்கார மற்றும் அழகு நிலையங்கள் திறந்திருக்கும்.
வசிக்கும் பிராந்தியத்திற்குள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வெளியே செல்லலாம்.
வெளிப்புறங்களில் தனிப்பட்ட அளவில் உடற்பயிற்சி நடவடிக்கைகளை செய்யலாம்.

  • 9 மற்றும் 10 ஆம் திகதிகள்: இரண்டு செம்மஞ்சள் நாட்கள்

சனவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில், இத்தாலி செம்மஞ்சள் நிற மண்டலமாக இருக்கும்.
bar மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் இரவு 10 மணி வரை எடுத்துச் செல்லும் சேவை மூலம் உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளலாம், அல்லது வீட்டிலேயே பெற்றுக்கொள்ளும் சேவையினை பயன்படுத்தலாம்.
பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பத்திரிகைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகள் திறந்திருக்கும்.
சிகையலங்கார மற்றும் அழகு நிலையங்கள் திறந்திருக்கும். காலை 5 மணி முதல் 22 வரை வசிக்கும் நகராட்சிக்குள் நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

  • 11 ஆம் திகதி: மீண்டும் நிறப் பிரிவு

சனவரி 11 முதல் 15 வரை இத்தாலி மீண்டும் மண்டலப் பிரிவிற்குள் உள்நுழைகிறது .
சனவரி 8 ஆம் திகதி வெளியாகும் கண்காணிப்பு விபரங்கள் மற்றும் உயர் சுகாதார நிறுவனத்தின் பிற அளவுருக்கள் அடிப்படையில் மண்டலப் பிரிவுகள் மேற்கொள்ளப்படும்.
– Rt 1 க்குக் கீழே இருக்கும் பட்சத்தில் பிராந்தியங்கள் மஞ்சள் நிற மண்டலமாக இருக்கும்.
– Rt 1 க்கு சமமாக இருந்தால் செம்மஞ்சள் நிற மண்டலமாக இருக்கும்.
– Rt 1.25 க்கு சமமாக இருந்தால் சிவப்பு நிற மண்டலமாக இருக்கும்.
எந்தவொரு பிராந்திய ஆளுநரும் பள்ளிகள், கடை திறப்பு மற்றும் அங்காடிகள், பிற வணிகங்கள் அல்லது நகர்வுகளில் அரசாங்கத்தின் விதிமுறைகளை விட அதிக கட்டுப்பாட்டு விதிகளில் கையெழுத்திட முடியும்.
கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக நகராட்சித் தலைவர்கள் பொது இடங்கள், தெருக்களையும் மூட முடியும்.

  • பிராந்தியங்களுக்கு இடையில் நகர்வது தடைசெய்யப்பட்டுள்ளது

இந்த ஆணை சனவரி 15 வரை செல்லுபடியாகும் என்றாலும் ஒருவரின் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதற்கான தடையும் குறைந்தபட்சம் சனவரி 31 வரை நீட்டிக்கப்படலாம். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சட்ட விதி, ” 2021 சனவரி 7 முதல் 15 வரை, வேலை, சுகாதாரம் மற்றும் அவசரம் போன்ற காரணங்களுக்காக, அல்லது நிரூபிக்கப்பட்ட தேவைகளைத் தவிர வேறு பிராந்தியங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது “.
அவசரநிலையைத் தவிர பிராந்தியத்திற்கு வெளியே இரண்டாவது வீடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
தங்கள் பிராந்தியத்திற்கு வெளியே இருப்பவர்கள் எப்போதும் தங்கள் குடியிருப்பு அல்லது வீட்டிற்கு திரும்பலாம்.

  • சிவப்பு நிற நாட்களில் நண்பர்களிடம் செல்வது

சிவப்பு நிற மண்டலத்திற்குள் நுழையும் பிரதேசங்களிலும் – “ஒரு நாளைக்கு ஒரு முறை, அதிகபட்சம் இரண்டு பேர், தங்கள் நகராட்சியில் உள்ள ஒரு தனியார் வீட்டிற்குச் செல்லலாம். நகரும் நபர் அல்லது இரண்டு நபர்களுடன் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் மற்றும் இந்த மக்களுடன் வாழும் ஊனமுற்றோர் அல்லது தன்னிறைவு பெறாத நபர்ககளை அழைத்துச் செல்லாம் “. நீங்கள் செம்மஞ்சள் நிற மண்டலத்தில் இருந்தால், பிராந்தியத்திற்குள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க நகர்வுகள் அனுமதிக்கப்படுகிறது. இது சனவரி 7 முதல் 15 வரை அனுமதிக்கப்படுகிறது.

  • சிறிய நகராட்சிக்குள் வசிப்பவர்கள்

முக்கியமாக 5.000 குடிமக்களை கொண்ட சிறிய நகராட்சிக்குள் வசிப்பவர்கள் 30 கி.மீ (Km) சுற்றளவில் நகர்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் மாகாண தலைநகரங்களுக்கு செல்ல முடியாது. பொருளாதார வசதியை கருத்தில் கொண்டு சிறிய நகரத்தில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள பெரிய நகரங்களுக்கு நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் கவனத்திற்கு